களியக்காவிளை, ஏப். 3 –
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு பா.ஜ.க, அ.திமுக கூட்டணி வேட்பாளராக விஜயதரணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சட்ட கல்வி முடித்து வக்கீலாக பணியாற்றியவர் ஆகும். மேலும் விளவங்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ வாக மக்களால் தேர்ந்த எடுத்து சட்டமன்ற உறுப்பினராக பனியாற்றி அனுபவம் உடையவர் ஆகும்.
இது போன்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கடந்த முறை போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.காந்தி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். குளச்சல் தொகுதி வேட்பாளராக கட்சியின் நிர்வாகி வழக்கறிஞர் சிவகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பத்மநாபபுரம் தொகுதிக்கு ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


