தேனி, ஜூன் 11 –
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் அவரின் உடலுக்கு (11.06.2026) தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான இயக்குநராக திகழ்ந்த பாரதிராஜா, கிராமிய வாழ்க்கை, பண்பாடு மற்றும் மனித உணர்வுகளை இயல்பாக திரைப்படங்களில் பதிவு செய்து தமிழ் சினிமாவிற்கு புதிய அடையாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அஞ்சலி நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.
“மண்ணின் மணத்தை திரையில் கொண்டு வந்த மகத்தான கலைஞருக்கு தமிழகம் என்றும் நன்றியுடன் இருக்கும்” என பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.



