By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடுதென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Last updated: August 4, 2026 5:15 pm
August 4, 2026
14 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 04 –

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவில்: தென்காசி மாவட்டத்தில் கோவில் கொடை விழாக்கள் கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் பாட்டுக் கச்சேரிகள் நடத்தவும் சாமக் கொடை நடத்தவும் இரவு முழுவதும் அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் கோவில் கொடை விழா, கோவில் திருவிழா காலங்களில் இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. சில இடங்களில் பாட்டுக் கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் தான் நடத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை காவல்துறை விதிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றாலும் கூட இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பது இல்லை.

தென் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், கோவில் கொடை விழாக்கள் என்பது இரவு முழுவதும் நடைபெறும் விழாக்கள் ஆகும். தென் மாவட்ட மக்களின் பாரம்பரிய கொடை விழா என்பது குலதெய்வ வழிபாடு, காவல் தெய்வங்கள் வழிபாடுகள் இரவு முழுவதும் நடைபெறுவது வழக்கமாகும். சாமக் கொடை என்ற பெயரில் பாரம்பரிய கொடை விழாக்கள் தென்காசி மாவட்டத்தில் காலங்காலமாக நடந்து வருகிறது. தென் மாவட்ட மக்கள் கோவில் கொடை விழாக்களில் கோவில் திருவிழாக்களில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கலைநிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரிகள் நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியானது இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு இரண்டு மணி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து சாமக் கொடை வழிபாடு என்பது நடைபெறும். இந்த கலாச்சாரம் காலங்காலமாக நடந்து வருகின்றது.

கடந்த சில வருடங்களாக தென்காசி மாவட்டத்தில் கோவில் கொடை விழாக்களில் குல தெய்வங்களுக்கு சாமக் கொடை கொடுப்பது அரிதாகிவிட்டது. காரணம் விழாக்கள் நடத்த சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த கடுமையான விதிமுறைகள் காவல் துறையால் சொல்லப்பட்டதாலும் பல நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாலும் விழா காலங்களில் பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறை கட்டணங்கள் கட்டச் சொல்வதாலும் சில இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உயர் நீதிமன்ற உத்தரவு வேண்டும் என்று காவல்துறை சொல்வதாலும் தென் மாவட்ட மக்களின் பாரம்பரிய குலதெய்வ வழிபாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் தங்களுக்கு தொழில்கள் இல்லாத காரணத்தினால் மாற்று தொழிலை நோக்கி வெளி மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்கின்ற ஒரு மோசமான சூழ்நிலை கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. இதனால் பாரம்பரிய கிராமிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. தென் மாவட்ட மக்கள் தமிழ்நாட்டில் உள்நாட்டில் கொடை விழா காலங்களில் அகதிகளை போல அடங்கி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கொடை விழாக்களில் திருவிழா காலங்களில் பிற மாவட்டங்களுக்கு ஒரு சட்டமும் தென்காசி மாவட்ட மக்களுக்கு ஒரு சட்டமாக இருப்பது வேதனைக்குரியதாகும்.

அதனால் எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று பரிந்துரை செய்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இரவு 10 மணிக்கு மேல் இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ரூ. 10.50 லட்சம் மோசடி செய்த கிளை மேலாளர்

January 29, 2025
85 Views
போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை திருவிழா
முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
இரணியல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account