தஞ்சாவூர், ஜூலை 2 –
தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் இயங்கும் நுண் உரம் செயலாக்க மையங்களில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து, ஆய்வும், உடனடியாக தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி 46 மற்றும் 49வது வட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் கூறினார். உடன் மண்டல குழு தலைவர் கலையரசன், மாமன்ற உறுப்பினர் கள் வட்ட கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.



