நாகர்கோவில் ஆகஸ்ட் 10
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நேற்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்க்கொள்வது குறித்தும்,
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீதும் பதியப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தருவதை உறுதிப்படுத்துவது குறித்தும்
கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும்,
காவல்துறை செயலிகளை பயன்படுத்தி கெட்ட நடத்தைகாரர்களை தொடர்ந்து கண்காணித்து குற்றம் நடவாமல் தடுக்க வேண்டும்.
காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்னக்களவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
புதியதாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்படப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பெற்ற வழக்குகளில் உடனடியாக எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் வாகனத்தை இயக்குவது 100 சதவீதம் இல்லாத வண்ணம் நடவடிக்கையை எடுக்க வேண்டும்
பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சரியான வாகன எண் இல்லாத, முறையான பதிவேடுகள் இன்றி வாகனத்தை ஓட்டுபவர்களை, முறையாக விசாரித்து திருடப்பட்ட வாகனமா அல்லது திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களின் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்களின் மீதும், அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்தபடியால் விபத்தின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
குற்ற வழக்குகளை விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்த மகிளா நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன், கூடுதல் அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஜெகதேவ், உதவி அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் செந்தில் மூர்த்தி மற்றும் அரசு வழக்கறிஞர் லினஸ் ராஜ் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிழ்கள் வழங்கி பாராட்டினார்.