By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “ஏற்காடு நம் உயிர் காடு” –
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > “ஏற்காடு நம் உயிர் காடு” –
சேலம்தமிழ்நாடு

“ஏற்காடு நம் உயிர் காடு” –

Last updated: September 14, 2026 2:44 pm
September 14, 2026
4 Views
Share
SHARE

சேலம், செப்.14:

தமிழ்நாடு அரசின் சார்பில் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நெகிழிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் “ஏற்காடு நம் உயிர் காடு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

செப்.11 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் நாடகம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள் மூலம் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எளிய முறையில் எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை தவிர்ப்பது, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைக்குழுக்கள் மூலம் நாளொன்றுக்கு 12 இடங்கள் வீதம், 10 நாட்களில் மொத்தம் 120 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அண்ணா பூங்கா, ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.

ஏற்காடு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவதால், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவர் கேட்டுக்கொண்டார். ஏற்காட்டின் இயற்கை எழில் மற்றும் பசுமையை எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்ல, அன்றாட வாழ்வில் நெகிழிப் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா பூங்கா பகுதியில் சாலையோரக் கடைகளில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கடை உரிமையாளர்களிடம் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததுடன், கழிவுகளை முறையாக அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஏற்காடு லேடிஸ் சீட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் காட்சி முனை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Meta Description:

விளம்பரம்

You Might Also Like

“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் 08 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.93,285 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி அகவை 60 வைர விழா மற்றும் நிறை விழா

October 9, 2025
72 Views
பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
புதூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account