ஈரோடு, ஏப். 27 –
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில் நுட்பவியல் துறையானது பட்டப்படிப்பில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் பொருட்டு ஸ்டார் கல்லூரி திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், சிறந்த ஆய்வகம் மற்றும் வகுப்பு வசதிகள் கொண்ட அறிவியல் கல்லூரியை தேர்ந்தெடுத்து முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.70 லட்சம் நிதி ஆதாரத்தை கொடுத்து வருகிறது.
அதன்படி வருகிற கல்வி ஆண்டுக்காக ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரி சிறந்த கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு செயல்பட்டு வரும் உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளின் கட்டமைப்பை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, பேராசிரியர்கள், மாணவர்களின் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், தொழிற்துறைகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டுகிறது.
நிதி உதவி பெறுவதற்கு, உறுதுணையாக செயல்புரிந்த கல்லூரி முதல்வர் மனோகரன், உயிர் தொழிலியல் துறைத்தலைவர் பரிமளம், நுட்பவியல் துறைத்தலைவர் அப்துல், கணினி அறிவியல் மற்றும் மாணவர்களுக்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.



