By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
ஈரோடுதமிழ்நாடு

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

Last updated: April 27, 2026 6:13 pm
April 27, 2026
11 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 27 –

தமிழ் இலக்கியக் களம் சார்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் பாரதிதாசன் விழா நடைபெற்றது. பாவேந்தர் கண்ட கனவு என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: பாரதிதாசன் கண்ட பல கனவுகள் கடைசி வரை நிறைவேறவில்லை. அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த பாரதிதாசன் விமானத்தில் ஏறி பயணம் செய்ய வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டிருந்தார். வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ‘பாண்டியன் பரிசு என்ற தனது காப்பியத்தையும் மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கி விட வேண்டும் என்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டார். பாரதிதாசனின் இத்தனை கனவுகளுமே கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது.

பாண்டியன் பரிசு திரைப்படத்தை சிறப்பாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் தான் சென்னையில் உலகத்தரம் மிக்க நூலகம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும் அந்நூலகத்தில் உலக அளவில் தலைசிறந்த அறிவார்ந்த நூல்கள் அத்தனையும் இடம்பெற வேண்டுமென்றும் உலகில் வெளிவந்துள்ள சிறந்த நூல்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தார் பாரதிதாசன்.

பாரதிதாசன் தமிழ், தமிழர் என்று மட்டும் அல்லாமல் விரிந்த உலகப் பார்வையோடு ஏராளமான கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 57 நாடகங்களையும் 11 காப்பியங்களையும் எழுதியுள்ள பாரதிதான் ஒரு தலைசிறந்த கவிஞர் என்பதோடு பன்முகத் தமிழ் ஆளுமையாக விளங்கியவர் போரில்லா உலகை உருவாக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர் பாவேந்தர் மனித நேயம். மானுட ஆற்றல். சகோதரத்துவம், சமத்துவம் உள்ளிட்டவை அவரின் அடிப்படைக் கொள்கைகளாக இருந்துள்ளன.

அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும். தமிழை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை சுவைத்துப் படிக்கிற பழக்கம் இளைஞர்களிடையே மேலோங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர் முனைவர் ரத்தின வேங்கடேசன் தலைமையேற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே மனைவி மாமியாருக்கு கொலை மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது
பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
ரூ.3559.60 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்

May 8, 2025
30 Views
அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர்
குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account