வேலூர், ஆக. 04 –
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மற்றும் வேலூர் ஆற்காடு சர்வீஸ் சாலையில் புதியதாக யூனி ஸ்கேன் மற்றும் லேப்ஸ் 12 வது கிளை திறப்பு விழா அண்ணா சாலை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள வீனஸ் டார்லிங் மஹாலில் மிக விமர்சியாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நறுவி மருத்துவமனையின் தலைவர் G.V.சம்பத், வேலூர் அரியூர் ஸ்ரீ புரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி நந்தகோபால், வேலூர் அடுக்கும் பாறை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ரதி திலகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தலைவர் OF lMA. Vellore branch சதீஷ்குமார் MD மற்றும் மருத்துவர் பிரபு ராதன், மருத்துவர் இளஞ்செழியன், மருத்துவர் வினோத் கண்ணன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இயக்குனர்கள், யூனி ஸ்கேன் லேப்ஸ் மருத்துவர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் அறுசுவை அசைவ விருந்து மற்றும் டின்னர் வழங்கப்பட்டது.



