மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூரில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு தீமிதி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு வீரசோழன் ஆற்றின் கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது. பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் ஆலயத்தை வந்தடைந்தது அங்கு அம்பாள் முன்னிலையில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



