By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி
மதுரை

மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி

Last updated: October 13, 2025 6:16 pm
October 13, 2025
27 Views
Share
SHARE

மதுரை, அக். 13 –

மதுரையில் நடைபெற உள்ள பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பிரச்சார தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழகம் தலை நிமிர பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் யாத்திரை தொடங்குகிறார். இந்த யாத்திரை தொடங்கும் நன்னாளில் அவருடன் கைகோர்த்து துணையாக பாஜக நிர்வாகிகள் வந்திருக்கிறோம் என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் 2026-ல் பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள தேசிய கட்சி பாஜக அதற்குரிய பாதிப்பு நாடாளுமன்றத்தில் தான் அதிகமாக இருக்கும். அதற்கு மாற்று கண்ணு கட்டிய தூரம் வரை இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. அவரை வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு ஆளும் திமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கொடுத்த ஆட்சியை நல்லபடியாக செய்திருந்தால் கூட பாஜக வளர்ந்து இருக்காது ஆனால் ஒவ்வொரு நாளும் குற்றமும் பொழுதொரு பலியுமாக இருப்பதால் வேறு வழியின்றி பாஜக என்ற ஒரே ஒரு கட்சி தான் கடவுள் மறுப்பு இனவெறுப்பு ஜாதி அரசியலுக்கு எதிராக குறிப்பாக வாரிசு அரசியலுக்கு மாற்றாக வந்து கொண்டிருக்கிறது. தேசிய கட்சியுடன் அதிமுக என்கிற வலுவான கூட்டணி இருக்கிறது. மேலும் புதிய பழைய காட்சிகள் அனைவரும் கூட்டணிக்கு வரதான் போகிறார்கள். ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதுதான் முதல் குறிக்கோள்.

தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு:

தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இணைய வேண்டும் என நினைக்கிறேன். இது எப்போதும் நான் சொல்லுவது தான். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்கிறவர்கள் ஒரு முகமாக இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். திமுக கூட்டணியில் சிறுபான்மையினர் ஓட்டுகள் விழும் என்ற கனவில் இருக்கிறார்கள். அதற்கு சரியான பதிலடி கொடுப்பதற்கு வலுவான கூட்டணி தேவைப்படுகிறது.

திருமாவளவன் வழக்கறிஞர் மீது தாக்குதல் குறித்த கேள்விக்கு:

இது பயங்கரமான சதி.வாதியைப் பார்த்து அந்த காருக்குள் இருக்கும் நபரை பார்த்து தான் வழக்கறிஞர் வந்தார். என்று திருமா சொல்வது எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்று தெரியும் அப்படி கூட பேசுவார் என்பது அவருக்கே புதிதாக இருக்கும். விஜய் சதி என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயம் உள்ளது. திருமாவளவன் சாலையில் செல்லும்போது தாக்குகிறார்கள் அது சரி என்று சொல்கிறார். அப்படி வேண்டுமென்றே அவர் விழுந்து இதை வாங்கிக் கொண்டாலும் கூட இறங்கி அடிக்கும் போது ஒரு தலைவராக அவர் பார்த்ததால் அந்த ஆணவத்திற்கு தான் அடிப்போம் என்று சொல்கிறார். முறைத்தால் அடிப்பீர்களா. அவர்களை சார்ந்தவர்களை நாம் பேசினாலே அது பிசிஆர் குற்றம் ஆனால் நான் அவரை அடிப்பேன் என்று சொல்வதை கேட்கும்போது நாம் இந்த ஜனநாயகத்தில் தான் இருக்கிறோமா என பயமாக உள்ளது. இதற்கெல்லாம் நம்முடைய ஆட்சி வழக்கு தொடராது, பட்ட பகலில் அவ்வளவு பேர் பார்க்கும்
போது வீடியோ எடுக்கும் போது அடித்திருக்கிறார்கள் அது ஆணவமான அடியாகும்

மேற்குவங்க மருத்துவ மாணவி கற்பழிப்பு குறித்த கேள்விக்கு:

ஆர்ஜிக்கர் விசாரணையே முழுவிதமாக முடியவில்லை. அதை மூடி மறைப்பதற்காக இருக்கும் போது இது வெளியே வந்துவிட்டது. வெளியே வராமல் இன்னும் எத்தனை பிரச்சனைகள் உள்ளது என தெரியவில்லை. உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு செல்பவர்களை வேறு ஒரு சிகிச்சை செய்து அனுப்பி விடுவார்கள் போல. ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது இரண்டு விஷயம் உள்ளது. ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது நல்லவேளை நாம் மேற்கு வங்கத்தில் இல்லை என பதறுகிறது. மம்தா பானர்ஜி ஒரு பெண் தலைவர். கட்சியைத் தாண்டி பெண்கள் பாதுகாப்பு என்பது ஒரு அடிப்படையானது. அந்த வகையில் தமிழக ஊடகங்களை நான் பாராட்டுகிறேன். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிடாமல் நீதிக்காக கட்சி பாகுபாடின்றி செய்தி சேகரித்ததற்கு நன்றி. தஷ்வந்த் வெளியே வந்து விட்டான் வயிறு எரிகிறது. அவன் மீது வெடிகுண்டு புரளி என்று சொல்லி சோதனை செய்ய மாட்டார்களா என்ற கேள்வி உள்ளது.

ஜிடி நாயுடு பெயர் விவகாரம் குறித்த கேள்விக்கு:

அதை நான் திமுக தனமாக தான் பார்க்கிறேன். சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தான் உபதேசம் அடி கண்ணே உனக்கும் எனக்கும் அல்ல. ஜாதியை மற்றவர்கள் பேசக்கூடாது நாங்கள் பேசுவோம் தற்போது தேர்தல் வருவதால் கோயம்புத்தூரில் ஜாதி பெயரில் பாலம். ஜிடி.நாயுடு அவர்களை நாயுடுவாக பார்க்கவில்லை விஞ்ஞானியாக தான் பார்க்கிறோம் என வீரமணி பேசி இருக்கிறார். ராஜாஜியை முதலமைச்சராக பார்க்கவில்லையா அவரை பட்டர் என்று தானே சொன்னீர்கள் காமராஜரை நாடார் என்று தானே பார்த்தீர்கள் முதல்வராக பார்க்கவில்லையா சார் சி.வி. ராமனை விஞ்ஞானியாக பார்க்கவில்லையா என கேள்வி வருமா வராதா. இவரை மட்டும் நீங்கள் விஞ்ஞானியாக பார்ப்பீர்கள் மற்ற சமூகத்தினரை ஜாதியாக பார்ப்பீர்களா. அது என்ன ரகசியம் என வீரமணி ஐயா கண்டிப்பாக தெளிவுபடுத்த வேண்டும்.

ஜிடி நாயுடு பெயருக்கு அண்ணாமலை வரவேற்பு குறித்த கேள்விக்கு:

ஜிடி நாயுடுவை மரியாதை செய்வது அவர் நினைவை பரப்புவது எப்போதும் ஏற்றுக் கொள்வோம். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக அண்ணாமலை அவருக்கு வரவேற்பு கொடுப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அண்ணாமலை ஜாதி பெயரை ஒழிப்போம் என்று என்றாவது சொல்லி இருக்கிறாரா. உலகில் யாரும் ஜாதிக்கு எதிராக இல்லை சாதி கொடுமைகளுக்கு அதன் ஏற்றத்தாழ்வுகளுக்கு தான் எதிரியாக இருக்கிறோம். ஒரு நல்ல குளத்தில் இருந்து வருவதற்கு, ஒரு நல்ல அடையாளத்தில் இருந்து வருவதை யாரும் மறுக்க மாட்டார்கள். வ.உ.சி யை நீங்கள் பிள்ளையாக தானே பார்த்தீர்கள்; வ.உ.சிதம்பரனார் என்று மாற்றினீர்கள். அதேபோல் தேவர் ஐயாவை முத்துராமலிங்கம் என்று சொல்வீர்களா? ஒருவரின் அடையாளத்தில் நமது வரலாறு, சுதந்திரப் போராட்டம், சமூக நீதிக்கான அடிப்படையில் அமைந்திருக்கிறது அதையெல்லாம் நாம் மறக்க கூடாது.

ஜாதி பெயரை அழித்துவிட்டால் ஜாதியை ஒழித்து விடலாமா? ரோட்டில் உள்ள ஜாதிப் பெயர்களை தார் வைத்து அழித்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. அழிந்து விட்டதா. ஜாதி பார்க்காமல் திமுக மற்றும் திமுகவினர் வேட்பாளரை நிறுத்த முடிகிறதா? ஜாதிக்கு யாரும் எதிரி கிடையாது. அதனால் வரக்கூடிய சமூக அநீதிகளுக்கு தான் எதிரியாக முடியும். ஆணவக் கொலை நடக்கும் போது உங்களின் ஆர்வம் எங்கே போனது? அதற்கு ஏதாவது சொன்னீர்களா? வீரமணி ஏதாவது பேசினாரா? இப்போது பேசுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

காணொளி காட்சி வாயிலாக சமூக நலன்
மதுரையில் போக்குவரத்து விதிமீறல்
வந்தே பாரத் ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி
பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய் வசந்த் எம் பி, தாரகை கத்பர்ட் எம் எல் ஏ ஆகியோருக்கு பாராட்டு விழா

July 15, 2024
153 Views
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் நிதி
தருமபுரியில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள்
தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account