திருவெண்ணெய்நல்லூர், நவ. 07 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் பாலு மகன் சத்யராஜ் (40). பூ செட்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (33). இந்நிலையில் நேற்று சத்யா வெளியூர் செல்வதற்காக காலை 10 மணியளவில் நகையை எடுப்பதற்காக பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் செயின், ஒரு பவுன் தோடு உட்பட இரண்டு பவுன் தங்க நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் சத்யராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவரது வீட்டில் மர்ம நபர் திருட சென்று தப்பி ஓடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


