மார்த்தாண்டம், பிப்-20
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (59 ) இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து மனைவியுடன் வசித்து வந்தார்.
மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் திருமணம் நடந்து ஒன்றரை வருடத்தில் அவரது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் 10 மாதங்களில் வெளியே வந்தத தாஸ் திடீரென தலைமறைவானார். இதை அடுத்து தாசை போலீசார் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தாஸ் கேரளா மாநிலம் கோட்டயத்தில் தலைமறைவாக இருந்ததாக கிடைத்த தகவலின் பெயரில் மார்த்தாண்டம் போலீசார் அவரை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆதரப்படுத்தினார்.
29 ஆண்டுகளுக்கு பின்பு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.