தமிழகத்தில் 50 முதல்வர்கள் உருவாகி விட்டனர் – – ஜெயலலிதா 1700 ஏக்கர் கொடநாட்டில் வாங்கியது ஏன்? கேள்வி கேட்க நாதி உண்டா? தி.மு.க. பொது கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. பொது கூட்டத்திற்கு மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில். தலைமை கழக பேச்சாளர் போடி .காமராஜ் சிறப்புரை ஆற்றினார். மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பேசும்போது – முன்னாள் முதல்வர் அ.தி.மு.க. பொது செயலாளர் – ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கொடநாட்டில் 1700 ஏக்கர் நிலம் வாங்கியது. ஏன்? என்றும், தமிழகம் முழுவதும் கட்டப்படும் அனைத்து இடங்களையும், கட்டிடம் கட்டியவுடன் வெள்ளை அடித்த உடன் யாருக்காக விலைக்கு வாங்கினார். என்று யாராவது கேட்டதுண்டா? – 50 ஆண்டுக்கு முன்பு சினிமா துறையில் சம்பாதித்த வீட்டில் கலைஞர் குடியிருந்தார் ஆனால் ஜெயலலிதா எத்தனை வீடுகள் மாற்றி உள்ளார் – ? கேட்பார் உண்டா? என்றார். திராவிட மாடல் ஆட்சியில் மகளீர் உரிமை தொகை, மகளீர் இலவச பேருந்து என பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். இன்று உலகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் பரவி உள்ளது. அதுதான் திராவிட மாடல் அரசியல் என்றார் இக்கூட்டத்தில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கழக உயர்நிலை செயல்திட்டு குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணி , நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன் இளையபெருமாள் அப்துல் மாலிக் அன்பழகன் மூர்த்தி ராஜா , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரவி, முத்து மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் ஹாப்பி ஹர்ஷத், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன், உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்றும் மேலும் 300 பெண்கள் உட்பட 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்