ராமநாதபுரம், ஜுலை 25-
சமீப காலமாக திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன வழிமுறையை பின்பற்றினால் கருத்தரித்து சுக பிரசவம் அடையலாம் என்பதற்கு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
நல்ல உணவு,நல்ல மனநிலை, நல்ல உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலைகள் செய்வது… இவற்றில் குறைபாடு வைப்பதால் ஏற்படும் விளைவுகளே கருப்பை கோளாறுகள் உருவாகிறது.
முதலில் அனேகமான பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் முதல் கோளாறு, முறையற்ற மாத விலக்கு… இவ்வாறு ஏற்பட்ட உடனே நாம் உஷாராகி விட வேண்டும். கருப்பையில் கோளாறு உள்ளது என்பதை அறிவிக்கும் ரெட் அலார்ட்தான். அதாவது முறையற்ற மாத விலக்கு.
இப்படி ஏற்பட்ட உடனே சிலர் மருந்து எடுத்து அரைத்து அதன் சாற்றை குடித்து வருவர். அவ்வாறு செய்வதால் அந்த மாதத்தில் மட்டும் மாத விலக்கு சரியாக வரும். அடுத்த மாதம் மீண்டும் பிரச்சனைதான்.
இந்த பிரச்சனை தீர என்னதான் வழி. முழுமையான தீர்வு என்ன? என்பதை பார்ப்போம்.
கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படும் முருங்கக்கீரையை அதிகமாக சமைத்து பெண் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கீரைகளை சாப்பிடுவதே கிடையாது. காய்கறிகள் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, பால், மாமிச உணவுகள் நன்றாக சாப்பிட்டால் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே நீக்கி விடலாம். இந்த பிரச்சனை நீங்கி விட்டால் கருப்பையில் எந்த பிரச்சனையும் வராது. நீர்க்கட்டியும் ஏற்படாது.
சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் மாதவிலக்கு இருக்கும். இன்னும் சிலருக்கு மாதத்தில் 2 முறை மாதவிலக்கு ஏற்படும். அவர்களும் பிரச்சனைக்கு ஆட்பட்டவர்களே. அவர்களும் மேற்கண்டவாறு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் துரித உணவுகளை தவிர்த்து சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நிலக்கடலை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் தேங்காயும் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் ஐந்து வேளை தொழுகைகளை தொழுதாலே போதுமானது. உடற்பயிற்சி தேவையில்லை. மனமும் அமைதியடைந்து தெளிவாக இருக்கும். இந்த பிரச்சனைகள் தீர முழு தீர்வாக அமையும். மற்றவர்கள் தினமும் காலை மாலை அரை மணி நேரம் யோகா செய்யலாம்.
இந்த இரண்டு கட்டத்தையும் மீறியாச்சு, கருப்பையில் பிரச்சனை இருக்கு என்ன செய்யலாம்? என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் அமைந்துள்ள சுகம் ஆயுர்வேத வைத்தியசாலையில் 94420 45435 என்ற எண்ணில் முன் பதிவு செய்து மருத்துவரின் உரிய ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து கூறினார.