சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக
மின் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்
திருப்புவனம் பிரதான சாலையில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் காலை 9 மணி அளவில் அங்குள்ள ஜெனரேட்டரை ஊழியர் இயக்க முயன்ற போது மின் கசிவு ஏற்பட்டு ஜெனரேட்டரில் தீ பிடித்து எரிந்தது இதுகுறித்து மானாமதுரையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு போது ஜெனரேட்டரில் அதிகம் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததால் தீ மனவளவென பற்றி எரிந்தது.
இது தொடர்பாக அங்குள்ள பொது மக்கள் கூறுகையில்
30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரையில் இருந்து தீ அணைப்பு வீரர்கள் வர தாமதமான நிலையில் ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் மேஜை நாற்காலி கடிதங்கள் மற்றும் பார்சல்களை அப்புறப்படுத்தி பொருட்கள் பாதுகாப்பு செய்யப்பட்டது. மேலும் இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க
திருப்புவனம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.