மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மங்கநல்லூர் கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் வரவேற்றார். இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா எம் பி கலந்து கொண்டு பேசினார் அப்போது இந்தியாவின் முன்னோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார் மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் திமுக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல் பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் எல் டி சி செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.



