மதுரை நவம்பர் 30,
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்கத்தின் வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்
மதுரை, வாடகை கடையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு 18% ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு இடையில் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் 2000-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, மதுரையை சுற்றியுள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஒத்தக்கடை, வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், மதுரை தேனி, ஈரோடு, சேலம் உட்பட 18 மாவட்டங்களில் முழு அடைப்பு கண்டுள்ளது மற்றும் 10 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிற சங்கங்கள் வேறு தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த போராட்டத்தினால் சுமார் 900 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு வாடகை ஜிஎஸ்டியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கையை முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க உறுப்பினர்கள் தங்களுடைய கடைகளையும் தொழிற்சாலைகளையும் மூடப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டத்தை ஆதரித்த சங்கத் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் அனைத்து சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.
க.திருமுருகன் நன்றியை தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகை கடையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்கள்
18% ஜிஎஸ்டி வரி எதிர்த்து கடையடைப்பினால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருள் வாங்குவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.