கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில், அகில இந்திய பெடரேசன் பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கேரளா, ஆந்திரா, மராட்டியம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளிலும் தமிழ்நாடு அணி பங்கேற்று விளையாடியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் விளையாடின. இதில் தமிழ்நாடு அணி 34-36, 35-29, 35-30 என்ற செட் கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் அணி வென்றது. இதேபோல் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி 2-வது இடம் பிடித்து அசத்தியது. இதையொட்டி பரிசு கோப்பை களுடன் திண்டுக்கல் திரும்பிய தமிழ்நாடு அணிக்கு, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக செயலாளர் விஜய், துணைத்தலைவர் டாக்டர் அ.சீனிவாசன்,கால்பந்து நடுவர் சங்க செயலாளர் அருண், ரெயில்வே வருவாய் கோட்ட வர்த்தக துணைமேலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பூப்பந்தாட்ட கழகத் துணைச் செயலாளர் மகேஸ்வரன், துணைநிலைய மேலாளர் ராபர்ட்லீ ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாலை மற்றும் பொன்னாடையை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள். இதில் பூப்பந்தாட்ட பயிற்சியாளர்கள் ரமேஷ், கவிதா, கிறிஸ்டோபர், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.