By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்
குற்றம்தமிழ்நாடுதேனி

தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்

Last updated: December 12, 2025 7:23 pm
December 12, 2025
57 Views
Share
SHARE

தேனி, டிசம்பர் 12 –

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரதீப்பிற்கும் சின்னமனூரை சேர்ந்த நிகிலாவிற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரதீப்பிற்கும் நிகிலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிகிலா பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிகிலாவும் இவரது சகோதரர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனரான விவேக் மற்றும் உறவினர்கள் முத்தையன் செட்டிபட்டிக்கு சென்று திருமண சீர் பொருட்களை எடுக்க வந்துள்ளதாக பிரதீப்பிடம் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் தரப்பிற்கும், நிகிலா மற்றும் விவேக் தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி நிகிலாவை வெட்டி உள்ளார். சம்பவ இடத்திலேயே நிகிலா இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். தன் கண் முன்னே சகோதரி உயிரிழந்ததை கண்ட விவேக் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பிரதீப்பின் தந்தை சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விவேக்கின் தலையில் சரமாரி குத்தி உள்ளார். விவேக்கும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலை வழக்கு சம்பந்தமாக போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று கொலை வழக்கில் தொடர்புள்ள பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகிய இருவரும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலை வழக்கில் சரண் அடைந்த மகன் மற்றும் தந்தை இருவருக்கும் நீதித்துறை நடுவர் நீதிபதி கமலநாதன் 24 மணி நேர காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மகன் மற்றும் தந்தை இருவரையும் போடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் 24 மணி நேரம் கழித்து போடி நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சம்பந்தமுள்ள இரண்டு குற்றவாளிகளையும் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
மதுரையில் தூய்மை பணியாளர்கள் அவர் லாண்ட் நிறுவனத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் 2 ஆயிரம் பேர் போராட்டம்
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
மணப்பாறை அருகே விபத்தில் உருக்குலைந்து போன லாரி
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு

April 6, 2025
63 Views
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
வக்ஃபு சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account