திருப்பத்தூர்:நவ:29, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருமால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் அருள் மொழி வர்மன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் சுகன் குமார் ஆர்பாட்டம் குறித்து விளக்கவுரை அளித்தார். திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறையினர் அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகளான: மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் ஆன பணி நியமனத்திற்கான ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களில் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மனது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மையம், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.