நாகர்கோவில் – ஜூன் – 11
பாராளுமன்ற தேர்தல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைப்பெற்று வந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .. 45 நாட்களுக்கு பின் நேற்று முதல் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்கியது . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க குறைவான மக்களே வந்திருந்தனர்… அதில் உண்ணாமலை கடை டவுன் பஞ்சாயத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கொல்லன் விளாகம் ஊர் மக்கள் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் அம்ருத் திட்டத்தின் கீழ் இந்த ஊரில் உள்ள எல்லா சாலைகளும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்டது பணிகள் முடிவடைந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகியும் சாலைகளை சீரமைக்காமல் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் இருந்து வருகிறது . தற்போது பருவமழை காலம் தொடங்கி விட்டதால், சாலையில் உள்ள குண்டுகளில் மழை நீர் தேங்கி சாலையில் மக்கள் வெளியே நடமாட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தினம், தினம் வாகன ஒட்டிகள் கீழே விழுந்து எழுந்து மீண்டு வருகின்றனர். பள்ளி கூடங்கள் தற்போது திறந்ததால் மாணவ மாணவியர்களின் உயிருக்கு கேள்வி குறி ஏற்பட்டு உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடபட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையினை சீரமைத்து தரும்படி கூறப்பட்டுள்ளது.



