ஊட்டி.பிப். 12. நீலகிரி மாவட்ட ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் -கோத்தகிரியின் மாதாந்திர செயற்குழு கூட்டம் கோத்தகிரி அலுவலகத்தில் தலைவர் வாசுதேவன் அவர்கள் தலைமையிலும் , பொருளாளர் மரியம்மா துணை தலைவர்கள் செல்வராஜ், இணை செயலாளர் வினோபா பாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் .முகமது சலீம் அமைப்பின் கடந்த மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார். அதன்பின் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கப்படுவதில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தராமல் இழுத்தடிப்பதோடு சாதரண மக்கள் வீடுகட்ட சிரம்ம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வசதி படைத்த பணம் செலவளிப்பவர்களுக்கு விண்ணபித்தவுடன் அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட அரசு விரைவாக வீடுகட்ட அனுமதித்து காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கோத்தகிரி மார்க்கெட் அருகில் உள்ள மேம்பாலத்தின் கூரை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள பொது மயானத்தை தூய்மை பணி செய்து தர வேண்டும் என்றும் கோத்தகிரி பகுதியில் தார் சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் வர்ணம் பூசி, ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும் என்று அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் ஆலோசகர் பிரவின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், அமைப்பின் தகவல் தொடர்பாளர் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் திரைசா, லலிதாசிவன், யசோதாசெல்வி, ரோஸ்லின், சுரேஸ் , செபாஸ்டியன் மற்றும் உறுப்பினர்கள் ஏசுராணி, தமிழ்செல்வி, ராதிகா, சங்கீதா , உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முகமது இஸ்மாயில் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.



