தக்கலை, நவ. 27 –
தக்கலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் போலீசார் இன்று மணலி சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கண்டன் கோணம் புஷ்பநாதன் (27), மெதுகும்மல், அதங்கோடு பகுதி ஜெர்பின் (19), இரணியல் பகுதி ஜெபின் (29) என்பது தெரியவந்தது. அனுமதி இன்றி 40 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.


