தருமபுரி கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா, கேப்டன் விஜயகாந்த் தின் 72 -வது பிறந்தநாள் விழா மற்றும் பத்மபூஷன் விருது வழங்கியதற்கு நன்றி அறிவிப்புவிழாஆகியவைகளை சேர்த்து கட்சியின் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி. குமார் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி நகர செயலாளர் ஜெய் சுரேஷ் வரவேற்புரையாற்றினார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ் மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமலிங்கம் தலைமை கழக பேச்சாளர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெண்களுக்கு புடவைகள் மற்றும்தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய வாரியாக நிர்வாகிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது .இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் பெரியசாமி, தங்கதுரை, பொன்மொழி ஒன்றிய செயலாளர்கள் சரணன்விஜயகாந்த், ராஜேந்திரன், ரமேஷ் பேரூராட்சி செயலாளர் கள் காயத்ரி, முரளி, மணி, யசேந்திரன் மற்றும் அணியின் பொறுப்பாளர்கள் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார் நன்றி உரையாற்றினார்.



