கோவை ஏப்: 30
கிரியேட்டிவ் களம் மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை இணைந்து நடத்தும் “கோடை திருவிழா 2025″வருகின்ற மே 1,2 தேதிகளில் கோவை சாலையில் அமைந்துள்ள கந்த மகாலில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிஷ்டி சிங் அவர்கள் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், ஆச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் மற்றும் ஆச்சிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து கிரியேட்டிவ் களம் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்த்தி மற்றும் தேவா அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி 60க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்கள், குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோ, இளைஞர்களுக்கு டிஜே போன்ற சிறப்பம்சங்கள் திரைப்பட நடிகர் அஜித் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமும் இந்த கோடை திருவிழாவில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி பகுதியில் நமக்காக தனது உழைப்பை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பெருமைப்படுத்தும் விதமாக விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம்.
கிரியேட்டிவ் களம் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் அவர்கள் பேசுகையில் இரண்டு நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 10,000 க்கு மேல் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் மேலும் இந்த சந்திப்பில் கிரியேட்டிவ் களம் நிறுவனத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் அழகேஷ் மற்றும் விஜய பாரதி, முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.