ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 13 –
ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் குழு ஆணையம் சார்பில கலசலிங்கம் பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து “சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் “மனித உரிமைகள் உறுதிமொழி தொடர் சங்கிலி நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சட்டத் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு, கல்வி உரிமை, சமத்துவம், வன்முறைத் தடுப்புபோன்ற தலைப்புகளில் மாணவர்கள் “எளிமையான தெரு நாடகத்தை”, ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம் போன்ற இடங்களில் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலசலிங்கம் சட்டத் துறை தலைவர் ஆர். ஜி. பாரதி, சமூகத்தில், சட்ட விழிப்புணர்வைப் பரப்ப மாணவர்களை ஊக்குவித்தார்.



