திருப்பூர், ஜூலை 22 –
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் காங்கிரஸ் மாநில முதன்மை துணைத் தலைவர் அருள் பாஸ்கர், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் அபிஷேக் சந்திரகுமார் ஆகியோரது தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் மகாத்மா காந்தியடிகள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அயராத பாடுபடுவோம் என தெரிவித்தனர். இதில் வடக்கு சட்டமன்ற தலைவர் அரவிந்தராஜ், முன்னாள் தலைவர் பாபு, நிர்வாகிகள் பிரபு மற்றும் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.



