தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நெய்தீபம், எலுமிச்சை பழ தீபம், ஷாம்பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



