தருமபுரி, ஜூலை 28 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டி, பூதனஅள்ளி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக நிர்வாகிகளை புதியதாக பொறுப்பேற்ற தருமபுரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் அசோகன் நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
பின்னர் பேசிய அவர்: தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் தற்போது படத்தின் டிக்கெட் 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தன் படத்தின் டிக்கெட் ஊழலை ஒழிக்காதவர் தமிழகத்தில் எப்படி ஊழலை ஒழிப்பார் என பேசினார். அதிமுகவில் தொண்டர்கள் தான் வேர்கள் எம்ஜிஆர், அம்மாவின் கரத்தை வலுப்படுத்தியது போல் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் கரத்தையும் வலுப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



