நாகர்கோவில் ஜூலை 18
கன்னியாகுமரி படகுதுறையில் படகு நிறுத்த வசதியாக கடல் பகுதியிலும், பேரலையினால் கரை பகுதிகளில் ஏற்படும்மண் திட்டுகளையும் சரி செய்யும் பணி அண்மையில் நடைபெற்றது. கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தாமண்டபம், திருவள்ளுவர்சிலை ஆகியவற்றை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் சுற்றுலாபயணிகள் விவேகானந்த மண்டபத்தை பார்வையிட வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு சேவை நடத்தப்பட்டு வருகிறது. படகு நிறுத்தும் இடத்தில் கடல் ஆழப்படுத்தும் பணி அண்மையில் தான் நடைபெற்றது. இதற்காக ராட்சஷ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது கடல் சீற்றம் காரணமாக ஏற்படும் அலையினால் படகு தளத்தில் மணல் சேர்ந்து திட்டாக மாறிவிடுவதால் படகு நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் தேங்கி கிடக்கும் மணல் மேடுகளை அவ்வப்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு குழாமில் சுற்றுலா படகுகள் நிறுத்தும் தளத்தில் கடலின் இயற்கை மாறுபாடு காரணமாக ஏற்பட்ட மணல் திட்டுகளை அகற்றும் பணி ஜெசிபி இயந்திரம் மூலமாக நடைப்பெற்றது.



