போகலூர், நவ. 20 –
ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாங சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு தேவிபட்டினம் காவல்துறையுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட சுமார் 1.3 கிலோ எடை உள்ள பான் மசாலா, குட்கா போன்ற உணவு பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அதை மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது இரண்டாவது முறை விற்பனை செய்த குற்றம். ஆதலால் கடை உடனடியாக மூடப்பட்டு ரூபாய் 50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று கடைகள் அதிரடி சோதனையில் சிக்கி ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.



