அபிராமம், டிசம்பர் 08 –
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் டவுன் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழையால் நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என உதவி கோட்ட பொறியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை.
மேலும் இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றன. தற்போது அபிராமம் முதுகுளத்தூர் நெடுஞ்சாலையில் அபிராமம் நகருக்கு வெளியே மராமத்து பணிகள் செய்ய வலியுறுத்தி உதவி கோட்ட பொறியாளர் சக்திவேலிடம் அபிராமம் நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலையை மராமத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



