கிருஷ்ணகிரி மார்ச் 19:
தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில், பர்கூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சரவணன், ஒன்றிய கழக பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலையில், பருகூர் தொகுதிக்குட்பட்ட வரட்டனபள்ளி, பாரத கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அங்கு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். பின்னர் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவாக அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவிற்கு மாவட்ட கழகவைத் தலைவர் முருகன், மாவட்ட கழக பொருளாளர் லட்சுமணன், மாவட்ட கழக துணைச் செயலாளர் SPசீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அத்திக்கானூர்வேலு,, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முருகன், காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகச் செயலாளர் விஜய்வல்லரசு, வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜீனூர்சங்கர், பர்கூர் பேரூராட்சி செயலாளர் மகேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் கிருஷ்ணன், பர்கூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திப்பனூர்குமார், பர்கூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் குமார், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் திருப்பதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், பிரபு, நாகராஜ், பழனி, மாதையன், ஒன்றிய கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ராமன், உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics