நாகர்கோவில், ஜூன் 5:
குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டு எட்டுகிறது .
குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளுக்கு நீர் வரத்து காணப்படுவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பகல் வேளையில் வெயில் கொளுத்திய நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக பேச்சுப்பாறை அணை பகுதியில் 12.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாலமோர் 3.2, தக்கலை 1.2, சிற்றார் – 1ல் 9.6, சிற்றார் – 2ல் 4.4, களியல் 3.2, குழித்துறை 5.6, பேச்சுப்பாறை 12.2, பெருச்சாணி 4.4, புத்தன் அணை 3.8, சுருளோடு 1.4, திற்பரப்பு 3.2, முள்ளங்கினா விளை 7.8, மில்லி மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 43.97 அடியாகும். அணைக்கு 466 கன அடி தண்ணீர் வரத்து காணப்படுகிறது. 301 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.55 அடி ஆகும். அணைக்கு 278 கன அடி தண்ணீர் வரத்துள்ளது.
முக்கூடல் அணையின் நீர்மட்டம் 3.1 அடி ஆகும்.