மதுரை ஆகஸ்ட் 29,
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், களிமங்கலம் ஊராட்சியில் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய கலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரா. மணிமேகலை, களிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரமீஸ் பாத்திமா ஹக்கீம் உட்பட பலர் உடன் உள்ளார்