ஈரோடு நவ 17
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் ” இரண்டாம் கட்டமாக துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில் அமைச்சர் முத்துசாமி ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு தமிழக முதல்வர் சட்டமன்ற விதி 110 -ன்படி பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தினை முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 433 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 572 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டமாக
தமிழக முதல்வர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6 மாதம் வரையுள்ள தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 74,706
குழந்தைகளுக்கு அரியலூர் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில்
இத்திட்டத்தினை தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு
எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில் அமைச்சர் முத்துசாமி மாவட்டம் முழுவதிலும் உள்ள
பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள
மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.46,23,266 மதிப்பீட்டிலான 2.041 ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் நெய், புரோட்டின் பவுடர், பேரிச்சம் பழம்,
இரும்புசத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை உள்ளிட்ட ரூ.2265 மதிப்பீட்டிலான
பொருட்கள் அடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா
ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர்
செல்வராஜ். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுமார் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி
திட்டப்பணிகள்) பூங்கோதை ஆகியோர் கலந்துகொண்டனர்.