தென்காசி, டிசம்பர் 17 –
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்குவதற்காக அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி பகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியடைந்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி கோயில்களில் மாவட்ட பிரதிநிதி நாகராஜ் தலைமையின் அதிமுகவினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் இன்று தான் விருப்ப மனு வழங்கி வருவதால் இந்த நல்ல நாளில் அதிமுக பொதுச்செயலாளர் மீண்டும் முதலமைச்சர் ஆக வர வேண்டி இந்த வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி அறிவுறுத்தலின் பேரில் புளியங்குடி பகுதியில் உள்ள மோனீஸ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவாக அசைவ உணவை வழங்கியும் சிறப்பித்தனர் நிகழ்ச்சியில்
வார்டு செயலாளர் பரமசிவம், முருகன், ஆர்.குருசாமி, முருகேசன், சன் மொபைல் முருகையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கணேசன், நாட்டாமை பாஸ்கர், வழக்கறிஞர் அணி ராஜேந்திர பூபதி, குருவையா, லியாக்கத் அலி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



