சுசீந்திரம், டிச. 12 –
மேலகிருஷ்ணன்புதூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவானந்தம் (28), வழக்கறிஞர். பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (38), டிரைவர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் சிவானந்தம் மகேஷுக்கு கடனாக ரூ. 70,000 கொடுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று கொடுத்த பணத்தை சிவானந்தம் திருப்பி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ், சிவானந்தை அசிங்கமாக பேசியும், அரிவாளால் தாக்கினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதில் காயமடைந்த சிவானந்தம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர் ட்பிரைட், மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து மகேஷை தேடி வருகின்றனர்.


