கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியாண்டப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ முருகன் கோயில் தேர்திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர் இழுத்தல், மயில் காவடி, புஷ்பக் காவடி, கரகாட்டம், அழகு குத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் புளியாண்டப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலிருந்து மாது மற்றும் செல்லமுத்து ஆகிய இரண்டு முருக பக்தர்கள் புதூர் மாரியம்மன் கோவில் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கிரைன் மூலம் அந்தரத்தில் தொங்கிச்சென்று புதூர் மாரியம்மன் கோயில் கலசத்தில் 60 அடி உயரத்தில் அமைந்துள்ள கலசத்திற்கு மாலை அணிவித்து தீபா ஆராதனையும் காட்டி பக்தர்களுக்கு பூக்களை தூவி அருள் பாலித்து பின்னர் அங்கிருந்து முக்கிய வீதி வழியாக மறுபடியும் விநாயகர் கோயில் அருகே வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்று இரவே பக்தர்கள் பழனி மலைக்கு சென்றனர். இதில் புளியண்டபட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகளுக்கும் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.



