சங்கரன்கோவில்: செப்:24
தமிழகத்தில்”மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரை தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட அளவிலான தலைவர்களும் திஷா கமிட்டி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் திஷா கண்காணிப்புக்குழு தலைவர்கள் உறுப்பினர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் கண்காணிப்பு திஷா கமிட்டி தலைவராக தென்காசி பாராளுமன்ற எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர்கள் நகராட்சி கமிஷனர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் மத்திய அரசின் திட்டங்களை கண்காணித்தல் குழுவில் இடம் பெற்றுள்ளனர் மேலும் அரசு சாரா உறுப்பினர்களாக சங்கரன்கோவில் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் வழக்கறிஞர் சதீஷ், கருத்தானூர் மனோகரன் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வழக்கறிஞர் சதீஷ் மற்றும் குழுவினர் தென்காசி பாராளுமன்ற எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமாரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.