தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் 1984 ஆம் ஆண்டு 0.1884 சங்கரநயினார்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. இந்த சங்க கட்டிடம் ஆனது 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நலன் கருதியும் மற்றும் அலுவலக கோப்புகளை பாதுகாப்பதற்கு மிகவும் சிரமமான நிலை உள்ளதாலும்,எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக கட்டிடத்தில் சங்கம் செயல்படவும், பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டிட உரிய நிதி ஒதுக்கி தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.