தென் தாமரைகுளம், டிச-8:அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள
மாடுகட்டிவிளையைச் சேர்ந்தவர் பால்நாடார் வயது 69 இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவார் அப்படி செல்லும் இவர் வெளியூர்களிலிருந்து 10, 15 நாட்கள் கழித்து தான் சொந்த ஊருக்கு வருவார். இவர் சம்பவத் தன்று வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர் குறித்து இவரது உறவினர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை அவரைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை இதுகுறித்து அவரது மகன் சுதாகர்
தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதை யடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பால்நாடாரை தேடி வருகின்றனர்.