கோவை அக்ட்:29
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்துகொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மருது சகோதரர்கள் வேலு நாச்சியார் வாழ்க்கையின் வீர வாழ்க்கை, புகழ் குறித்து பேசினார். தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் தேவர், வேலுநாச்சியார் மூவருக்கும் சிலை நிறுவப்பட வேண்டும் எனவும் அந்த சிலையை தானே தருவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி மருது சகோதரர்களுக்கும் தனி இடத்தில் தனி சிலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து அரசியல் குறித்து பேசிய அவர் அதிமுகவை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளதாக தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி உள்ளதை பாராட்டிய அவர் எக்காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
நடிகர் விஜய் மாறுதலுக்காக வருகிறார் அந்த மாறுதல் உங்களால் வரட்டும் என கூறிய புகழேந்தி விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும் நடிகர் ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை கமல் வேறு விதமாக அரசியல் செய்வதாக சாடினார்.
தற்பொழுது உள்ள சூழலில் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து நிமிடம் இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திருந்துவதில்லை எனவும் சாடினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிச்சாமி தானே ஆனால் தற்பொழுது திமுகவை கை காண்பிப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை எனவும் கூறினார்.



