ஓலை குளம் புதிய கலையரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாயை மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் துவக்கி வைத்தார் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு யூனியன் உள்பட்ட ஓலைகுளம் கிராமத்தில் ஊர் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, இவ்விழாவை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார், பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தலைமையில் ஓலைகுளம் மணிகண்டன், திமுக மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணசாமி, மாரிகாளை, திமுக அவைத்தலைவர் ராமர் பாண்டியன், முத்துக்குமார், சங்கிலி பாண்டியன், மணிகண்டன், வீரய்யா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் ராஜாபுது குடி பால்ராஜ், ஊர் நாட்டாமை, பொதுமக்கள், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திமுக கிளைச் செயலாளர் R.கருப்பசாமி செய்திருந்தார்..



