மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்க நாதப்பெருமானே பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகவும், அருளாளர் நால்வரால் பாடல் பெற்றதும், புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலமாகவும், தெய்வீக திருமணம் நடைபெற்று அனைவருக்கும் திருமணப்பாக்கியம் கிடைக்க அருள்புரியும் ஸ்தலமாகவும் விளங்கும் இத்திருக்கோயிலில் 1434-ஆம் பசலி திருக்கார்த்திகை உற்சவம் 10.11.2024-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10:30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் (காலை 11.05 முதல் 11.29க்குள்) மகர லக்கணத்தில் கொடியேற்றம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து 10.11.2024 ஆம் தேதி முதல் 19.11.2024 ஆம் தேதி முடிய நடைபெறவுள்ளது. மேற்படி உற்சவம் 10 நாட்களும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், 16.11.2024 திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை 07.00 மணியளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும் சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்கள். மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். எனவே உபய தங்கரதம். உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கீரிடம் ஆகிய விசேடங்கள் எதுவும் நடைபெறாது என்ற விபரத்தை
இணை ஆணையர், செயல் அலுவலர்
கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்