குளச்சல், டிசம்பர் 31 –
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாய் அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மாணவி 22 வார கர்ப்பிணியாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மகளிடம் விசாரித்தார்.
அப்போது விசாரித்த போது: கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த மரைன் இன்ஜினியரான விஜேஷ் (20) என்பவருக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். இதற்கிடையே விஜேஷின் பாட்டி வீடு கொல்லங்கோடு பகுதியில் உள்ளது. இதனால் பாட்டி வீட்டிற்கு வந்த விஜேஷ் மாணவியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அங்குள்ள மறைவான இடத்திற்கு அழைத்து வாலிபர் திருமண ஆசை கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் மீண்டும் ஒரு மாதம் கழிந்து பாட்டி வீட்டுக்கு வந்த விஜேஷ் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கற்பமடைந்தது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த இன்ஜினியர் விஜேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


