ஆரல்வாய்மொழி, அக். 27 –
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாழக்குடி புளியன்விளை பகுதியில் நெல் வயல் அறுவடை செய்த இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் புளியன்விளை பகுதியை சேர்ந்த எபி கண்ணன் (19) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் துண்டு அணிந்திருந்தார். இந்த நிலையில் அந்த அறுவடை இயந்திரம் சுழண்டுள்ளது. அப்போது துண்டு நெல் அறுவடை பல் சக்கரத்தில் சிக்கியது. இதிலிருந்து அவர் தப்பிக்க முற்பட்டபோது கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளுக்கு தெரிந்த உடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர் இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எபிகண்ணன் பத்தாம் வகுப்பு வரை படித்து தற்போது பல்வேறு கூலி தொழில் செய்து வந்த நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.



