மார்த்தாண்டம், நவ. 10 –
மார்த்தாண்டம் அருகே மருதன்கோடு பகுதியை சேர்ந்தவர் சசி (50) கொத்தனார். சசிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று சசி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது அறைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் மனைவி விஜயகுமாரி சாப்பிடுவதற்கான அவர் அறைக் கதவை தட்டியையும் நீண்ட நேரம் கதவு திறக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில் சசி தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (75) என்ற கூலி தொழிலாளி கடந்த சில மாதங்களாக நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் கடந்த மாதம் 21 ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார். உறவினர்கள் அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சுந்தர் ராஜ் உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


