திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அரசு அலுவலர் கூட்டமைப்பின் சார்பில் மாணவர்களின் நலன் கருதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 7.5% உயர் கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நல்ல திட்ட உதவிகளையும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும் எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர் நலம் கருதி ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கில் எடுத்து பணியிட நிர்ணயம் செய்வதோடு அரசு அனுமதித்த காலிப்பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் நல்லா பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டியும், இதுபோன்று மிக முக்கிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்க நிகழ்ச்சி ஆனது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது.



